பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!

பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் க்கு நேர்ந்த சோகம் விவரம் உள்ளே.. Kalakka povadhu yaaru fame venkatesh attacked | Galatta

கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு  போன்ற பிரபல நகைச்சுவை நிகழ்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்த கலைஞர் வெங்கடேஷ். மிமிக்ரி தொடங்கி பன்முகதிறமையினால் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பிரபலமடைந்த வெங்கடேஷ் அவர்களுக்கு இன்று வரை ரசிகர்களின் அபிப்ராயம் இருந்து வருகிறது. கருப்பசாமி குத்தகைகாரர் உள்ளிட்ட பல படங்களிலும் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் அவர்களும் அவரது டிரைவரும் காரில் சென்று கொண்டிருந்த போது வழியில் மர்ம நபர்கள் மூன்று பேர் வழிமறித்து கார் ஒட்டி வந்த டிரைவரை மிரட்டி அங்கிருந்து ஓட செய்துள்ளனர். பின் நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் அவர்களை காருடன் சேர்த்து கடத்தி சென்றுள்ளனர். பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெங்கடேஷ் அவர்களை அடித்து உதைத்து அவரது இரண்டு கால்களையும் உடைத்து உள்ளனர். வலி தாங்கமுடியாமல் வெங்கடேஷ் அலறி அடித்து கத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் அவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின் போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில உருட்டு கட்டைகளுடன் பாரதிய ஜனதா கட்சியினரின் கொடி கிடைத்துள்ளதால் அந்த கோணத்தில் விசாரணை தொடங்க மர்ம நபர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் என்று தெரிய வந்துள்ளது. பின் விசாரணையில் முதல் முக்கிய குற்றவாளியாக வெங்கடேசனின் மனைவி ஈடுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவத்தில் வெங்கடேஷ் மனைவி, டிரைவர் மற்றும் கூலி படையினர் குற்றவாளிகளாக தெரிய வந்துள்ளது.

பின் சம்பவத்தின் பின்னணியில் வெங்கடேஷ் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஐந்து வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களது விவகாரத்து நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.  இருந்து இருவரும் ஒரே வீட்டில் வஸிதுஹ் வருகின்றனர். மேலும் வெங்கடேஷ் அவர்களின் மனைவிக்கும் டிரைவருக்குமான நட்பு இவர்களது வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வெங்கடேஷ் முன்னதாக முகநூல் பக்கத்தில் பாஜக கட்சியினரை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். இதை சாதகமாக எடுத்து கொண்டு வெங்கடேஷ் அவரை அடித்து பாஜக கட்சி கொடியை அப்பகுதியில் வீசி நிகழ்வை திசை திருப்ப முயற்சித்துள்ளனர். பின் விசாரணையில் வெங்கடேஷ் மனைவி உள்ளிட்ட நான்கு நம்பர்களை போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.   

“பெரியார், அம்பேத்கருடன் அண்ணாவையும் படியுங்கள்..!” தளபதி விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன்..!
சினிமா

“பெரியார், அம்பேத்கருடன் அண்ணாவையும் படியுங்கள்..!” தளபதி விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன்..!

“பழகுதலும்.. விலகுதலும்..” ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களை வருத்தமடைய செய்த இரா. பார்த்திபன்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.!
சினிமா

“பழகுதலும்.. விலகுதலும்..” ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களை வருத்தமடைய செய்த இரா. பார்த்திபன்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.!

“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..