“பெரியார், அம்பேத்கருடன் அண்ணாவையும் படியுங்கள்..!” தளபதி விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன்..!

தளபதி விஜயின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன் விவரம் உள்ளே - Vetrimaaram support Thalapathy Vijay | Galatta

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த போது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக 234 தொகுதியிலிருந்து தளபதி விஜய் தலைமையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அழைக்கப்பட்டு கல்வி விருது விழா நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் அமைந்திருக்கும் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில் 234 தொகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் வருகை தந்திருந்தனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தளபதி விஜய் கௌரவித்தார். சுமார் 6000 மாணவ மாணவியர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் தளபதி விஜய் அறுசுவை விருந்து அளித்தார். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவினை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வியந்து வரவேற்றனர். மேலும் விஜயின் இந்த செயல் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. அதனுடன் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்த விழாவில் தளபதி விஜய் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார். அதில் குறிப்பாக விஜய் பேசியது  “இந்த விழா மனதிற்கு ஒரு பெரிய பொறுப்புணர்ச்சி தருகிறது. இது மாதிரி ஒரு விழாவை நடத்துவதற்கு ரொம்ப ரொம்ப முக்கிய காரணம் என்னவென்றால், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் அழகான ஒரு வசனத்தை பார்த்தேன், கேட்டேன், “காடு இருந்தா எடுத்துக்குவானுங்க ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க ஆனா படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” அது மிகவும் பாதித்த ஒரு வசனமாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல இதுதான் எதார்த்தமும் கூட... இப்படி ஒரு முக்கியத்துவம் இருக்கும் இந்த கல்விக்கு என் தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன். “ என்று குறிப்பிட்டு பேசிருந்தார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் இடம் பெற்றுள்ள வசனத்தை மேற்கோள் கட்டிய தளபதி விஜயின் பேச்சு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில்  இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் கேட்கையில்,

“சினிமாவில் நம்ம சொல்ற விஷயம் சமூகத்தில் பிரபலமான ஒருவரை அது சென்றடையும் போது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தான் நான் பார்கிறேன். “ என்று பேசினார். மேலும் விழா மேடையில் மாணவர்களிடம் பெரியார், அம்பேத்கர், காமராஜர் அவர்களை படிக்க சொல்லி விஜய் கேட்டு கொண்டார். இது குறித்து வெற்றிமாறன் அவர்களின் கருத்து கேட்கையில், “நம்ம வரலாற்றினை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த மேடையில் அவர் பேசியுள்ளார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் உடன் சேர்த்து அண்ணாவையும் படிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். தற்போது வெற்றிமாறன் தளபதி விஜய் அவர்களின் பேச்சுக்கு ஆதராவாக பேசியவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ -  வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சினிமா

விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ - வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!
சினிமா

பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!

மகன் ‘மீர்’ உடன் அட்லி..  தந்தையர் தின வாழ்த்து கூறிய ப்ரியா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

மகன் ‘மீர்’ உடன் அட்லி.. தந்தையர் தின வாழ்த்து கூறிய ப்ரியா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..