சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் மிரட்டும் வசந்த் ரவி.. – வெளியானது அஸ்வின்ஸ் பட டிரைலர்..!

வசந்த் ரவி நடிப்பில் உருவாகிய அஸ்வின்ஸ் பட டிரைலர் உள்ளே - Vasanth Ravi Aswins Trailer Out now | Galatta

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் வசந்த் ரவி. இயக்குனர் ராம் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான தரமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வசந்த் ரவி. முதல் படத்திலே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்படி ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார் வசந்த் ரவி. பின் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரத்தம் தெறிக்கும் பழி வாங்கும் திரைக்கதையாக வெளியான ‘ராக்கி’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார் வசந்த் ரவி, மிரட்டலான தோற்றத்தில் அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார் வசந்த் ரவி. இப்படத்தை தொடர்ந்து வசந்த் ரவி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி முடித்துள்ள ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து வசந்த் ரவி இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் வெப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

 இதனிடையே வசந்த் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அஸ்வின்ஸ். குறும்படங்களால் பிரபலமடைந்த இயக்குனர் தருண் தேஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவிருகும் அஸ்வின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பிலிருந்தே தன் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து இப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் அவர்களின் மகள் சரஸ்வதி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் விமலா ராமன்,  முரளிதரன், சிம்ரன் பரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் உடன் பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, விஜய் சித்தார்த் அஸ்வின்ஸ்  படத்திற்கு இசையமைக்கிறார்.

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமானுஷ்ய சாபத்திற்கு பலியாகும் யூட்யூபர் குழுவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் திரைப்படத்தை ஏற்கனவே இயக்குனர் தருண் தேஜா 20 நிமிட பைலட் திரைப்படமாக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிட படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முழு நீள படமான அஸ்வின்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அஸ்வின்ஸ் படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிரட்டலான திரைக்கதையில் பக்கா திரில்லர் ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் பட டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. தரமணி, ராக்கி படங்களை போன்று அஸ்வின்ஸ் படத்திலும் வசந்த் ரவி அவர்களின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டு அஸ்வின்ஸ் திரைப்படம் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..

ஜிப்ரான் இசையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு பாடல் எழுதும் வைரமுத்து..  – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

ஜிப்ரான் இசையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு பாடல் எழுதும் வைரமுத்து.. – வைரலாகும் வீடியோ உள்ளே..

“கடவுள் தாமதிக்கலாம், ஆனால் மறுக்க மாட்டார்..” சமந்தாவின் உருக்கமான பதிவு – ஆறுதல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. – விவரம் இதோ..
சினிமா

“கடவுள் தாமதிக்கலாம், ஆனால் மறுக்க மாட்டார்..” சமந்தாவின் உருக்கமான பதிவு – ஆறுதல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. – விவரம் இதோ..