மகன் ‘மீர்’ உடன் அட்லி.. தந்தையர் தின வாழ்த்து கூறிய ப்ரியா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

அட்லி க்கு தந்தையர் தின வாழ்த்து கூறிய பிரியா வைரல் புகைப்படங்கள் உள்ளே – priya atlee fathers day wishes to atlee | Galatta

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. பின் தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்து தொடர் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லி அதன்படி தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி வலம் வந்தார். பிகில் படத்திற்கு பின் திரைதிரையில் சற்று இடைவெளி விட்ட இயக்குனர் அட்லி பாலிவுட் பக்கம் திரும்பினார். அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் உடன் கூட்டணி அமைத்தார் இயக்குனர் அட்லி.

ரெட் சில்லி என்டர்டேயின்மன்ட் சார்பில் கெளரி கான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்க இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கின்றார்.  மேலும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்கோத்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ரூபன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் மூலம் பெரும்பாலான தமிழ் பிரபலங்கள் இந்தியில் அறிமுகமாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

விறுவிறுப்பாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் முன்னதாக ஜூன் 2 ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பட வேலைகள் உள்ளதால் தற்போது உலகமெங்கும் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7 ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜவான் படத்தின் வேலையில் பிஸியாக இருக்கும் அட்லி அவரது மனைவியும் நடிகையுமான பிரியா அவர்கள் தந்தையர் தினத்தை முன்னிட்டு அட்லி மற்றும் அவர்களது மகன் மற்றும் செல்லபிராணி ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து அதனுடன் தன் வாழ்த்துகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

jailer actor vasanth ravi thriller psychological movie aswins trailer out now

அப்பதிவில், “தந்தையர் தின வாழ்த்துகள் டாடா.. மீர், பெக்கி மற்றும் அம்மா உங்களை அதிகம் நேசிக்கின்றோம். நீங்கள் இந்த உலகத்திலே சிறந்த அப்பா.” என்று பிரியா அட்லி குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

Happy happy Father’s Day dear DADA ❤️
Meer , Becky and mumma loves you to the moon and back ❤️
Ur the best DADA in the whole world ❤️
Love youuuuuuuuuu 😘😘😘@Atlee_dir ❤️#meer #becky pic.twitter.com/LGwaIg9ePq

— Priya Mohan (@priyaatlee) June 18, 2023

இயக்குனர் அட்லி – ப்ரியா தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பாலிவுட் கிங் கான் ஷாருக் கான் மீர் என்று பெயரிட்டது குறிப்பிடதக்கது.

 

“பழகுதலும்.. விலகுதலும்..” ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களை வருத்தமடைய செய்த இரா. பார்த்திபன்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.!
சினிமா

“பழகுதலும்.. விலகுதலும்..” ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களை வருத்தமடைய செய்த இரா. பார்த்திபன்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.!

“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..

ஜிப்ரான் இசையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு பாடல் எழுதும் வைரமுத்து..  – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

ஜிப்ரான் இசையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு பாடல் எழுதும் வைரமுத்து.. – வைரலாகும் வீடியோ உள்ளே..