மலையாள சினிமாவில் ஒரு ஸ்மால் ஃபேமிலி திரைப்படத்தில்  நடிகையாக அறிமுகமாகி பின்னர், சேட்டாயீஸ்: லவ்வபில் ராஸ்கல்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகியானவர் நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து தமிழ்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் அமரகாவியம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மியா ஜார்ஜ் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, நடிகர் சசிகுமார் நடித்த வெற்றிவேல், நடிகர்கள் தினேஷ், ரமேஷ் திலக் மற்றும் ரித்விக்கா இணைந்து நடித்த ஒரு நாள் கூத்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த எமன் உள்ளிட்டோர் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார்.
 
கடந்த வருடம் தொழிலதிபரான அஸ்வின் ஃபிலிப்போஸ்-ஐ, நடிகை மியா ஜார்ஜ் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை மியா ஜார்ஜுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அடுத்ததாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இரண்டாம்  பாகத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மியா ஜார்ஜ், நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் கோப்ரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by miya (@meet_miya)