விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பொண்ணுக்கு தங்க மனசு.கடந்த 2018 முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் இந்த தொடர் நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில் வர்ஷினி என்ற முக்கிய வேடத்தில் நிஷா ஹெக்டே நடித்து வருகிறார்.இவர் நடனத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பவர்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நடன வீடியோக்களை பதிவிட்டுள்ளார் நிஷா.பெல்லி டான்ஸில் அசத்தும் இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Nisha Hegde (@nishaahegde)