“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..

விடுதலை படத்தை பார்த்து வியந்த ரஜினிகாந்த் - Superstar Rajinikanth about Viduthalai | Galatta

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வெற்றிமாறனின் ‘விடுதலை’. RS இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் அவர்களுடன் இணைந்து வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் விடுதலை. 80 களின் கதைகளத்தில் நேர்த்தியான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க இவருடன் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன்,  ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் மிகபெரிய நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெற்றிமாறனின் விடுதலை படத்தை இயக்குனர் வெற்றிமாறன், கதாநாயகன் சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் படக்குழுவினருடன்  பார்த்தார். மேலும் இவர்களுடன் பிறபல தயாரிப்பாளர்  கலைபுலி எஸ் தாணு அவர்களுடம் திரைப்படத்தினை கண்டு களித்தனர்.

 

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விடுதலை படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில்,

"விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரம்மிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா தான்.  வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.  இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று  குறிப்பிட்டுள்ளார்.  இதனையடுத்து ரஜினிகாந்த் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic.twitter.com/FawO7l1oqA

— Rajinikanth (@rajinikanth) April 8, 2023

இந்த சந்திப்பு குறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,

இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி..” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் சூரி அவர்களின் பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி @rajinikanth#ViduthalaiPart1 pic.twitter.com/PChgWfvE6c

— Actor Soori (@sooriofficial) April 8, 2023

 

'பொன்னியின் செல்வன்' வசூலை தொட்ட தளபதி விஜயின் ‘லியோ’.. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கொடுத்த தகவல் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

'பொன்னியின் செல்வன்' வசூலை தொட்ட தளபதி விஜயின் ‘லியோ’.. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கொடுத்த தகவல் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ உள்ளே..

“இது புஷ்பாவோட Rule..” மிரட்டலான வீடியோவை வெளியிட்ட படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

“இது புஷ்பாவோட Rule..” மிரட்டலான வீடியோவை வெளியிட்ட படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..

“படத்துல ரயில் விபத்தையே காட்றதா இருந்தோம்..” ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – விடுதலை சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“படத்துல ரயில் விபத்தையே காட்றதா இருந்தோம்..” ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – விடுதலை சிறப்பு நேர்காணல் இதோ..