லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான அப்டேட் இதோ..

நயன்தாரா 75 வது படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் - Music Director Thaman Joins Nayanthara 75th film | Galatta

தென்னிந்தியா சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 2004 ல் ஐயா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா பின் தொடர்ந்து அட்டகாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரஜினிகாந்த் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை நயன்தாரா பல முன்னணி ஹீரோவுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்களில் நடித்து முக்கியமான ஹீரோக்களுக்கு நிகரான ரசிகர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஹீரோக்களுடன் திரையை பங்கிடுவது மட்டுமல்லாமல் கதாநாயகி மையப்படுத்தி கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டமும் வர்த்தக ரீதியான மார்கெட்டும் கிடைத்துள்ளது. நேர்த்தியான நடிப்பினாலும் அட்டகாசமான தொற்றத்தினாலும் தமிழ் சினிமாவில் இரண்டு தசபதங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து மணமுடித்தார், இந்த தம்பதியினருக்கு அழகான இரட்டை ஆண் குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது குறிப்பிடதக்கது, தற்போது நயன்தாரா தமிழில் ஜெயம் ரவி படமான ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன்மூலம்  இந்தியில் முதல் முறையாக நயன்தாரா அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் 75 படமாக உருவாகவுள்ள ‘லேடி சூப்பர் ஸ்டார் N75’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் பணியாற்றும் முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை அறிவித்து வந்தது. அதன்படி படத்தொகுப்பாளர் பிரவின் ஆண்டனி, கலை இயக்குனர் துரை ராஜ் மற்றும் கைதி,  மாஸ்டர், தசரா ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வர தற்போது படக்குழு படத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளரை அறிவித்துள்ளது.

 

The wait is over!!! The highly anticipated reveal of the #Ladysuperstar75 Music Director is here!

Welcoming the incredibly talented Music Director @MusicThaman to the team! 🎶🎉#Nayanthara #N75 @Nilesh_Krishnaa @ZeeStudios_ @tridentartsoffl @NaadSstudios #Ravindranpic.twitter.com/ssIw1uShhD

— Zee Studios South (@zeestudiossouth) April 7, 2023

தென்னிந்தியாவின் தற்போது அதிகம் பேசப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் தமன் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முக்கிய படங்களில் இசையமைத்து வருகிறார் குறிப்பாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் கேம் செஞ்சர் படத்தில் இசையமைத்து வருகிறார். தமன் இசையில் இந்த ஆண்டு தளபதி நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோ மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் அவர்களின் முன்னாள் இணை இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ் மற்றும்  ரெடின் கிங்க்ஸ் லி நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“இது புஷ்பாவோட Rule..” மிரட்டலான வீடியோவை வெளியிட்ட படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

“இது புஷ்பாவோட Rule..” மிரட்டலான வீடியோவை வெளியிட்ட படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..

“படத்துல ரயில் விபத்தையே காட்றதா இருந்தோம்..” ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – விடுதலை சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“படத்துல ரயில் விபத்தையே காட்றதா இருந்தோம்..” ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – விடுதலை சிறப்பு நேர்காணல் இதோ..

சார்பட்டா பரம்பரை 2 வில் சந்தோஷ் நாராயணன் இருக்கிறாரா?.. - பா ரஞ்சித் கொடுத்த பதில்.. முழு விவரம் உள்ளே..
சினிமா

சார்பட்டா பரம்பரை 2 வில் சந்தோஷ் நாராயணன் இருக்கிறாரா?.. - பா ரஞ்சித் கொடுத்த பதில்.. முழு விவரம் உள்ளே..