"Good morning பொண்டாட்டி.. னு Message பண்றாங்க...” நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்த தகவல் - அட்டகாசமான நேர்காணல் இதோ..

தனக்கு வந்த குறுஞ்செய்தி குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த நடிகை திவ்யா கணேஷ் - Divya Ganesh about her followers | Galatta

தமிழ் சின்னத்திரை நடிகைகளில் சம காலத்தில் மக்களின் அபிமானத்தை பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை திவ்யா கணேஷ். சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ திடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகாமாகி மக்களின் மனங்களை கவர்ந்த திவ்யா கணேஷ் பின் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான லட்சுமி வந்தாச்சு மற்றும் சுமங்கலி ஆகிய தொடர்களிலும் நடித்து வந்தார். இதில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பாக்யலஷ்மி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து திவ்யா கணேஷ் அவர்களுக்கு ரசிகர் கூட்டம் உருவானது. இதன்மூலம் பிரபலமடைந்த திவ்யா கணேஷ் தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.மேலும் தொடர்ந்து செல்லம்மா தொடரிலும் நடித்து வருகிறார். ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் நடிகை திவ்யா கணேஷிடம் பாக்ய லக்ஷ்மி தொடர் குறித்து கேட்கையில்,

“பாக்யலஷ்மி சீரியல் வந்தப்போ கிரிஸ்டியன் பொண்ணு னு சொன்னாங்க.. நான் யோசிச்சேன்.‌ சேரியெல்லாம் கட்டிட்டு பொட்டு வெக்கலான நல்லாருக்காது ல.. முதல்முறை கதை சொல்லும் போது நான் அந்த மாதிரி கதாபாத்திரத்திரம் பண்ணதில்ல.. கதை பிடிச்சதால நான் பண்ணலாம் னு முடிவு பண்ணேன்.." 

மேலும் தொடர்ந்து தீவிர ரசிகர் என்ற நிகழ்வு நடந்த அனுபவம் குறித்து கேட்கையில்,

"அசார் கூட ஒரு நிகழ்சி பண்ணிருந்தேன். நிறைய பேர் அந்த நிகழ்ச்சி பார்த்து எனக்கு மெசேஜ் பண்ணிருந்தாங்க.. மேடையிலும் நிறைய வாழ்த்தினாங்க.. கேமிரா முன்னாடி நடிக்கிறது வேற எல்லார் முன்னாடியும் மேடையில் ஆடுறது வேற.. எனக்கு அதுதான் முதல் முறையும் கூட.. அது பார்த்துட்டு நிறைய மெசேஜ் லாம் வந்தது.நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லி திரும்பவும் மெசேஜ் பண்ணிருந்தேன். அப்படி ஒருத்தருக்கு அனுப்பும்போது அவர தினமும் குட் மார்னிங் மேம் னு அனுப்புவார். அப்பறம் திவ்யா கணேஷ் னு மாறிச்சு.. அப்பறம் குட்மார்னிங் டி..  வந்துச்சு.. ஒரு கட்டத்துக்கு மேல குட் மார்னிங் பொண்டாட்டி அப்படி னு வந்துச்சு நான் பயந்துட்டு பிளாக் பண்ணிட்டேன். என்னுடைய மெயில் என்னோட இன்ஸ்டாகிராம் ல இருக்கும். அதுல இருந்து அதே ஆள் 'என்ன ஏன் பிளாக் பண்ணிட்டீங்க.. நீங்க இல்லனா செத்துடுவேன்' னு மெயில் பண்ண ஆரம்பிச்சாரு..  அப்பறம் மெயில்ல வீடியோ லாம் அனுப்புவார். அவர் பேசுறா மாதிரி வீடியோ அனுப்புவார். நான் பயந்துட்டேன்.. இன்னிக்கு வரைக்கும் அவர் குட் மார்னிங் மெயில் அ அனுப்பிட்டு தான் இருக்கார். " என்றார் நடிகை திவ்யா கணேஷ்

மேலும் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் தனது ரசிகர்கள் முன்னிலையில் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

சினிமா

"அந்த காட்சி 'Wow' அப்படி இருந்தது" - இயக்குனர் ராஜீவ் மேனன் விடுதலை படம் குறித்து பகிர்ந்த தகவல்- முழு வீடியோ இதோ...

“சும்மா ஒன்னும் சொல்லல.. அவர மக்கள் செல்வன் னு..” விஜய் சேதுபதியை புகழ்ந்த இயக்குனர் ராஜீவ் மேனன் – சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

“சும்மா ஒன்னும் சொல்லல.. அவர மக்கள் செல்வன் னு..” விஜய் சேதுபதியை புகழ்ந்த இயக்குனர் ராஜீவ் மேனன் – சுவாரஸ்யமான வீடியோ இதோ..

“துப்பாக்கி படத்தில் விஜய் கதாபாத்திரம் இப்படித்தான் உருவானது..” ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“துப்பாக்கி படத்தில் விஜய் கதாபாத்திரம் இப்படித்தான் உருவானது..” ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..