'ஃபகத் பாஸில் பிறந்த நாளுக்கு புஷ்பா 2 - தி ரூல் படக்குழுவின் செம்ம சர்ப்ரைஸ்!'- பன்வார் சிங் ஷேக்வாட்டின் மிரட்டலான போஸ்டர் இதோ!

ஃபகத் பாஸில் பிறந்தநாளுக்கு புஷ்பா 2 படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டது,fahadh faasil birthday special poster from pushpa 2 the rule | Galatta

இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் தனித்துவமான நடிகராக விளங்கும் ஃபகத் பாஸில் அவர்களின் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் வகையில் புஷ்பா 2 தி ரூல் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஹீரோ வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெவ்வேறு கதைக்களங்களில் விதவிதமான வேடங்களில் வெரைட்டி கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் ஃபகத் பாசில் இன்று ஆகஸ்ட் 8ம் தேதி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் பகத் பாசனின் பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மலையாளத்தில் ஃபகத் பாஸில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், நியான் பிரகாசன், கும்பலங்கி நைட்ஸ், அதிரன், ட்ரான்ஸ், இருள், மாலிக் உள்ளிட்ட திரைப்படங்கள் மலையாள சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும், ஏன் இந்திய அளவிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தன. 

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஃபகத் பாசில், தொடர்ந்து தமிழில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஃபகத் பாசில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். முன்னதாக இந்த 2023 ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த பாச்சுவும் அத்புத விளக்கும்,  தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் மற்றும் கே ஜி எஃப், சலார் படங்களின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS தயாரிப்பில் தூமம் உள்ளிட்ட படங்கள் வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளன.

அடுத்ததாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஹனுமான் கியர், பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாட்டு, சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோமஞ்சம் படத்தின் இயக்குனர் ஜிது மாதவன் இயக்கத்தில் புதிய படம் என வரிசையாக அட்டகாசமான படங்களில் நடிக்கும் ஃபகத் பாஸில், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டரான புஷ்பா 1 - தி ரைஸ் திரைப்படத்தின் அடுத்த பாகமாக தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் புஷ்பா 2 - தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்தில் பன்வார் சிங் சேக்வாட் என்ற மிரட்டலான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடிகர் ஃபகத் பாசில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாஸிலின் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் வகையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தில் இருந்து ஃபகத் பாஸில் கதாபாத்திரத்தை மிரட்டலான புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது அந்த போஸ்டர் இதோ…
 

Team #Pushpa2TheRule wishes the Massively Talented #FahadhFaasil a very Happy Birthday ❤‍🔥

Bhanwar Singh Shekhawat Sir will be back on the big screens with vengeance 🔥

Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @SukumarWritings @TSeries pic.twitter.com/kGBo7o4NlY

— Mythri Movie Makers (@MythriOfficial) August 8, 2023