"லேடி அல்டிமேட் ஸ்டார் பட்டம்" குறித்து முதல்முறை மனம் திறந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்... சுவாரஸ்யமான பேட்டி இதோ!

லேடி அல்டிமேட் ஸ்டார் பட்டம் பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்,ramya krishnan about lady ultimate star title in galatta plus | Galatta

இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து வெரைட்டியான கதாபாத்திரங்களிலும் பல மொழிகளிலும் நடித்து மக்கள் மனதை வென்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மெகா ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்னும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகில் தன்னுடைய புதிய உச்சத்தை தொட்ட ரம்யா கிருஷ்ணன் அங்கிருந்து படிப்படியாக வளர்ந்து பாகுபலி ராஜமாதா கதாபாத்திரம் என மக்கள் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் தயாராக இருக்கும் குண்டூர் காரம் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நம்மோடு தனது திரைப்பயணத்தின் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் அவர்களின் இல்லத்தில் அவர் பெற்ற விருதுகளில் ஒன்று "லேடி அல்டிமேட் ஸ்டார்" ரம்யா கிருஷ்ணன் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து அவரிடம் பேசிய போது, “இதுதான் உங்களுடைய பட்டமா? தெலுங்கு திரைப்படங்களில் அதை பட்டமாக பயன்படுத்துகிறார்களா? எனக் கேட்ட போது, “எனக்கு எந்த பட்டமும் கிடையாது” என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம், “உங்களுக்கு ஒரு பட்டம் இருக்க வேண்டும் நீங்கள் கிட்டத்தட்ட 1983 - 84 சமயத்தில் வந்தீர்கள் இப்போது 40 ஆண்டுகள் ஆகிவிட்டது அதனால் உங்களுக்கு ஒரு பட்டம் இருக்க வேண்டுமே?” என கேட்டபோது, "நான் நீண்ட காலமாக பட்டம் இல்லாமல் தான் தாக்குபிடித்து இருக்கிறேன்.” என தெரிவித்தார். தொடர்ந்து பேசியபோது எப்படி தாக்கு பிடித்தீர்கள் உங்களோடு பயணத்தை தொடங்கிய நிறைய 80களின் கதாநாயகிகள் அவர்களும் அதன் பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்டிகளாக மாறிவிட்டனர். ஆனால் உங்கள் அளவிற்கு யாரும் நீடித்து இருக்கவில்லை. அவர்களுக்கு உங்களைப் போல வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. பல மொழிகளிலும் நடிக்கவில்லை. இப்போது ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் வருகிறது தொடர்ந்து மகேஷ்பாபு அவர்களின் குண்டூர் காரம் படத்தில் நடிக்கிறீர்கள். இந்த மாதிரி பெரிய படங்கள் உங்களை நோக்கி வருகின்றன. பெரிய படமான பாகுபலி திரைப்படமும் வந்தது. என்ன ரகசியம் எது உங்களை லேடி அல்டிமேட் ஸ்டாராக வைத்திருக்கிறது” எனக் கேட்டபோது, “இது பற்றி உங்களுக்கு என்ன நடந்தது ஏன் நடந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்போது என்னால் ஒரு நூறு வழிகளில் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நிஜமாக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.