"ஏண்டா படையப்பா படம் பண்றோம்னு பண்ணேன் ஆனா..!"- படையப்பாவிற்கு முன் - பின் பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்! வைரல் வீடியோ

படையப்பாவிற்கு முன் - பின் பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்,ramya krishnan about how padayappa movie changed her cinema journey | Galatta

தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சிறந்த நடிகைகளில் ஒருவராகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகைகளின் ஒருவராகவும் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கதைக்களங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல மொழி திரையுலகிலும் கொடிகட்டி பறப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தனது வெரைட்டியான கதாபாத்திரங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்த நீலாம்பரி எனும் கதாபாத்திரம் காலம் கடந்தும் இன்று வரை பேசப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வரும் எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரு ரெஃபரன்ஸ் கதாபாத்திரமாக நீலாம்பரி கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனால் இன்றும் உயர்ந்து நிற்கிறது என்று சொல்லலாம். அதுபோலவே பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திலும் ராஜமாதா சிவகாமி கதாபாத்திரத்தில் மிரள வைத்தார் ரம்யா கிருஷ்ணன்.

அடுத்ததாக தெலுங்கில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் குண்டூர் காரம் எனும் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னதாக படையப்பா படத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அவருக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டைனர் திரைப்படமாக வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ட்ரெண்டிங் ஹிட் ஆகி இருக்கின்றன. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவான ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த பெரிய வரவேற்பு தவறிய நிலையில் ஜெயிலர்  திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நம்மோடு தனது திரைப்பயணத்தின் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், படையப்பா திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்த போது இருந்த தன்னுடைய மனநிலை குறித்தும் அதன் பிறகு தனது திரைப்பயணத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மனம் திறந்து பேசினார். அப்போது, “ஏண்டா படையப்பா படத்துல நெகட்டிவ் ரோல் பண்றோம்னு அந்த ரோல் பண்ணுனேன். ஆனால் அதுதான் எனக்கு அதிகப்படியான புகழை பெற்றுக் கொடுத்தது. 15 வருட திரைப்பயணத்திற்கு பிறகு நடித்த படையப்பா திரைப்படம் தான் எனது அடுத்த 15 வருடத்தில் முதல் 15 வருடத்தை விட அதிகமாக பேரையும் புகழையும் கொடுத்தது. இது எல்லாம் எப்படி என்னுடைய வழியில் வந்தது என்று எனக்கு தெரியவில்லை." என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.