ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பக்கா மாஸாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முழு வீடியோ இதோ!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய முழு வீடியோ,superstar rajinikanth speech in jailer audio launch full video | Galatta

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயலலிதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், ரெடன் கிங்ஸ்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல்.K படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவாக சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலில் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக வெளிவர இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் மிகப்பெரிய வெற்றியை தவறிய நிலையில் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனவும் ரசிகர்களுக்கும் செம்ம ட்ரீட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததால் இந்த ஜெய்லர் திரைப்படம் அந்த மாதிரியான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி இயக்குனர் நெல்சனுக்கு மற்றொரு பெரும் வெற்றியை கொடுக்கும் என ட்ரெய்லரில் தெளிவாக தெரிகிறது. 

மேலும் கடந்த ஜூலை 28ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் பேசுவதை விட இந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரசிகர்களை தனது ஸ்டைலான பேச்சால் ரசிக்க வைத்தார். இயக்குனர் நெல்சன் அவர்களை அவரது ஸ்டைலிலேயே கலாய்த்து பேசியது, படத்தில் உடன் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உட்பட ஒவ்வொருவரின் பணியையும் குறிப்பிட்டு பேசியது, பருந்து - காகம் என நெகட்டிவ் விஷயங்களை பற்றி பேசியது, திரை உலகிற்கு வருவதற்கு முன்னால் மேடை நாடகத்தில் துரியோதன கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து அப்போது தனக்கு குடிப்பழக்கம் இருந்ததைப் பற்றி குறிப்பிட்டு அனைவரும் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என அட்வைஸ் கொடுத்தது என கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக 45 நிமிடங்களுக்கும் மேலாக கொஞ்சமும் தன்னுடைய எனர்ஜியும் குறையாமல் ரசிகர்களுக்கும் எனர்ஜி குறையாத மாதிரி செம்ம ஸ்டைலாக ரஜினிகாந்த் பேசினார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்த முழு வீடியோவை சன் டிவி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…