பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அசத்தல் நடனம் ! ட்ரெண்டிங் வீடியோ
By Aravind Selvam | Galatta | June 21, 2021 19:31 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர்.இந்த தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் காவியா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.
வெகு விரைவில் சீரியல் கனவுக்கன்னியாக காவியா உருவெடுத்தார்.அடுத்ததாக விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார் காவியா.மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடித்து செம ஹிட்டான இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
Axess Film Factory தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கவுள்ளார்,இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து காவியா அறிவுமணி நடிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் காவ்யா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் ஷேர் செய்து அசத்துவார்.தற்போது சிவாஜி படத்தின் வாஜி வாஜி பாடலுக்கு நடனமாடி ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.