தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக நடித்து வருபவர் VJ தீபிகா.தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி தொடர் மூலம் சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.அடுத்ததாக விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற தொடரில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

சில காரணங்களால் இந்த தொடரில் பாதியில் விலகினார் தீபிகா.இதனை அடுத்து 6-7 மாதங்கள் சில வாரங்களுக்கு முன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் தொடரில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தி வருகிறார்,இந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி தொடரில் முக்கிய வேடத்தில் முழுநேரம் நடித்து ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இவர் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.