தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.

2019 முதல் சன் டிவியில் வெற்றிகரமாக சென்று வரும் சீரியல் பாண்டவர் இல்லம்.பாப்ரி கோஷ்,ஆர்த்தி சுபாஷ்,கிருத்திகா அண்ணாமலை,அணு,டெல்லி குமார்,நரேஷ் ஈஸ்வர்,நேசன் நெப்போலியன்,குஹன் என பல நட்சத்திரங்கள் இணைந்து இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் 600 எபிசோடுகளை கடந்து சென்று வருகிறது.சீரியல்களில் அவ்வப்போது சில பல மாற்றங்கள் நடப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.அப்படி இந்த தொடரிலும் தற்போது ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த மதுமிதா இளையராஜா சில காரணங்களால் விலகியுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா நடிக்கிறார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இவரது இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.