தமிழ் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தவர் தொகுப்பாளினியும்,நடிகையுமான சித்ரா.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக அசத்தி வந்த இவர் இன்று திடிரென்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைவரிடமும் நம்ம வீட்டு பொண்ணு என்ற அந்தஸ்தில் இருந்த சித்துவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் சித்து இருப்பார் அவர்களை சந்திப்பது அவர்களுடன் உரையாடுவது என்று துறுதுறுவென எப்போதும் இருப்பார்.மேலும் சில ரசிகர்களின் பிறந்தநாளையும் இவர் கொண்டாடியுள்ளார்.

இவருடைய வாழ்க்கை பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளது.மிகவும் தைரியமாக தனக்கு வந்த பல பிரச்சனைகளை எதிர்கொண்டு பல வருடங்களாக சின்னத்திரையை கலக்கி வந்தார் சித்ரா.பலரும் சித்ராவை மிக தைரியமான பெண் என்று கூறி வருகின்றனர்,ஆனால் அப்பேற்பட்ட சித்ரா இப்படி விபரீத முடிவு எடுக்க என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மக்கள் டிவியில் தொகுப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய சித்ரா ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார்.தற்போது தனது கடந்தகால கஷ்டங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் பிரபல மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அந்த வீடீயோவை ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Tamilstatus nds【100K+】 (@nds_edits)