இந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து  காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் இணைந்து நடிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நட்சத்திரம் நகர்கிறது படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் முதல்முறை சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர் தலைவராக பாடுபட்ட பிஸ்ரா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய பயோபிக் திரைப்படம் ஹிந்தியில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது நீலம் புரோடக்சன்ஸ் வாயிலாக சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடைசியாக ரைட்டர் & குதிரைவால் ஆகிய படங்கள் வெளிவந்து கவனத்தை ஈர்த்தன. இந்த வரிசையில் அடுத்ததாக பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் J.பேபி.

நீலம் புரோடக்சன்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் & லிட்டில் ரெட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் J.பேபி (BABY'S DAY OUT) படத்தில் ஊர்வசி மற்றும் தினேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் லொள்ளு சபா மாறன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தயாராகியுள்ள J.பேபி திரைப்படத்துக்கு சேதுமாதவன் ஒளிப்பதிவில் சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பு செய்ய டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் J.பேபி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள J.பேபி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…