தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக மாறியவர் இயக்குனர் வெங்கட் பிரபு.சென்னை 28,சரோஜா,மங்காத்தா என பல ஹிட் படங்கள் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு.

சிலம்பரசன் நடிப்பில் இவரது இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் வசூலில் பட்டையை கிளப்பி சூப்பர்ஹிட் அடித்தது.இதனை அடுத்துதனது 10 படத்தினை இயக்கியுள்ளார்.ராக்போர்ட் என்டேர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்திற்கு மன்மத லீலை என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,ரியா சுமன்,சம்யுக்தா ஹெக்டே என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.பிரேம்ஜி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்,அத்துடன் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் இளமை ததும்பும் ரொமான்டிக்கான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான வா கணக்கு என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.பிரேம்ஜி இசையில் இளைஞர்களிடம் ஹிட் அடித்து வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்