தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் மிர்ச்சி சிவா இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து C.S.அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் & தமிழ் படம் 2, சுந்தர்.சி-யின் கலகலப்பு, கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னை  ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

முன்னதாக சிவா , யோகி பாபு , பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடிக்க 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள காசேதான் கடவுளடா மற்றும் ஜீவா & சிவா இணைந்து நடித்துள்ளா கோல்மால் மற்றும் ஆகியப் படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகவுள்ளன.

மேலும் சிவா & யோகிபாபு இணைந்து நடித்துள்ள சலூன் மற்றும் சிவா கதாநாயகனாக நடித்துள்ள சுமோ படமும்  ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அடுத்ததாக வருகிற ஏப்ரல் 1ம் தேதி நடிப்பில் திரைக்கு வரவுள்ளது மிர்ச்சி சிவாவின் இடியட் திரைப்படம். நடிகர் சிவாவுடன் இணைந்து நிக்கி கல்ராணி , ஊர்வசி, அக்ஷரா கௌடா, மயில்சாமி, ஆனந்தராஜ் & ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தில்லுக்குதுட்டு பட இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தயாராகியுள்ள இடியட் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இடியட் படத்திற்கு விக்ரம் சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இடியட் படத்திலிருந்து ஒரு பார்வையால பாடல் தற்போது வெளியானது. கலக்கலான ஒரு பார்வையால பாடல் இதோ…