தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் வீடியோவில் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து முதல் முறையாக சீயான் விக்ரமுடன் இணைகிறார் பா.ரஞ்சித்.

இயக்குனர் பா.ரஞ்சித்-சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

விரைவில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் வேட்டுவம். இப்படத்தை நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் வேட்டுவம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். வேட்டுவம் திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள வேட்டுவம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…