ஆகச்சிறந்த திரைக்கலைஞராக கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து வைப்பவர் இயக்குனர் பார்த்திபன். அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie)  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில் உருவாய் இருக்கும் இரவு நிழல் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரவின் நிழல் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். முன்னதாக வெளிவந்த திரைப்படத்தின் இரவின் நிழல் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து சமீபத்தில் இரவின் நிலவு திரைப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இரவு நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரவின் நிழல் திரைப்படம் திரையிட தகுதி பெற்றுள்ளது. 

முன்னதாக வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் இரவின் நிழல் படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற ஜூன் 24-ஆம் தேதி இரவின் நிழல் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
parthiban iravin nizhal movie release date announcement