தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் அருண் ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கினார். கனா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சிவாங்கி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் ஹிட்டான ஆர்டிகள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், தீபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நாளை மே 20ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

முன்னதாக நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ வெளியானது. நெஞ்சுக்கு நீதி படத்தின் Sneak Peek வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.