கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக விளங்கும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து தமிழக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார் லெஜண்ட் சரவணன்.

அஜித்குமார் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் மற்றும் த்ரில்லர் திரைப்படமான விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். தி லெஜன்ட் படத்திற்கு  R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும்  தி லெஜன்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக வருகிற மே 29-ம் தேதி தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தி லெஜண்ட் படத்தின் முதல் பாடலாக வெளிவந்த மொசலோ மொசலு பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக வாடி வாசல் வீடியோ பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த வீடியோ பாடல் இதோ…