ஆஸ்காரில் வாக்கு செலுத்திய முதல் தமிழ் நடிகர்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..

ஆஸ்கார் விருதுக்கு வாக்கு செலுத்திய சூர்யா - Suriya casts his vote for Oscar 95th award | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் சூர்யா. பல தாசப்தங்களாக கடின உழைப்பினால் ரசிகர்களுக்காக வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். பெரிய நட்சத்திர அந்தஸ்துடன் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தாலும் கடினமாக உழைத்து தன் பெயரை தனித்து நிலை நாட்டி தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் சூர்யா. அதன்படி ஏகப்பட்ட மெகாஹிட் கொடுத்த திரைப்படங்களை கொடுத்து வந்தார் சூர்யா. குறிப்பாக கடந்த 2020 ம் ஆண்டு  சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான‘சூரரைப்போற்றுதிரைப்படம் இந்திய அளவு மெகா ஹிட் அடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் பின் அதே ஒடிடியில் வெளியான ‘ஜெய் பீம்சூர்யாவிற்கு மேலும் ஒரு ஹிட் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யா திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்திரையரங்குகளில் பல எதிர்ப்புகளை தாண்டி வெளியானது. பல இடங்களில் மக்கள் ஆதரவை பெற்று படம் வெற்றி பெற்றது. தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்ட தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்திலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிகப்பெரிய அளவு பேசப்பட்டார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த சூர்யா தற்போது ஆஸ்கார் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்கு செலுத்தியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Voting done! #Oscars95 @TheAcademy pic.twitter.com/Aob1ldYD2p

— Suriya Sivakumar (@Suriya_offl) March 8, 2023

ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெறும் படங்களுக்கு வாக்களிக்கும் ஆஸ்கர் கமிட்டி ஒன்று இருக்கும். இவர்களின் வாக்குகள் தான் எந்த படத்திற்கு விருதுகள் சென்றடையும் என்று நிர்ணயிக்கும். அதன்படி ஆஸ்கர் கமிட்டி குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச் 12 நடைபெறவுள்ள 95 வது ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் உலக நாடுகளின் மிக முக்கியமான் திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு சிறந்த பாடல் என்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்லோ ஷோ (Chhello Show) குஜராத்தி படமும் ஆல் தி பிரீத்ஸ் (All that Breathes) என்ற ஆவணப் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற ஆவணப் படமும் இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.பல உலகநாடுகளின் விருதுகளை குவித்து வரும் ராஜமௌளியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் நிச்சயம் ஆஸ்கர் விருது பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தின Special - முன்னணி நடிகைகளும் திரைத்துறையும்.. TOP 12 பட்டியல்! கட்டுரை தொகுப்பு இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மகளிர் தின Special - முன்னணி நடிகைகளும் திரைத்துறையும்.. TOP 12 பட்டியல்! கட்டுரை தொகுப்பு இதோ..

பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து.. நிகழ்ச்சியில் நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து.. நிகழ்ச்சியில் நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ இதோ..

வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..
சினிமா

வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..