ஜெயம் ரவியின் அகிலன் படத்தை கைப்பற்றிய பிரபல ஒடிடி தளம் – அதிகாரபூர்வ அப்டேட் இதோ..

அகிலன் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளம் குறித்த அப்டேட் இதோ - Agilan OTT and Television rights update | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் ஜெயம் ரவி. துவக்கத்திலிருந்தே குடும்பங்கள் சார்ந்து குடும்பங்கள் கொண்டாடும் கதைகளத்தில் நடித்து அவருக்கான ரசிகர் பட்டாளத்தை மிகப்பெரிய வட்டமாக உருவாக்கியுள்ளார். கடின உழைப்பினால் ரசிகர்கள் மனதை ஆளும் ஜெயம் ரவி  கடந்த ஆண்டு மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நடித்தார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன்  மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்திற்கு பின்  ‘அகிலன் நீண்ட நாள் கழித்து இப்படம் வரும் மார்ச் 10 ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவிருக்கின்றது. பூலோகம் பட இயக்குனர் கல்யான் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் தயாரிப்பில் ஜெயம் ரவியின் 28 படமாக உருவாகியுள்ள படத்த்தில் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்ஷோசம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வித்யாசமான தோற்றத்தில் துறைமுகம் சார்ந்த கதைதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களின் அதிகம் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படம் வெளியாக இரண்டே நாள் இருக்கும் நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட வேலை மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Happy to announce @actor_jayamravi 's #Agilan Satellite rights acquired by @kalaignartv_off#AgilanFromMarch10
@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl pic.twitter.com/EwE4vxvUio

— Screen Scene (@Screensceneoffl) March 8, 2023

இந்நிலையில் அகிலன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மற்றும் இணைய உரிமையை அறிவித்துள்ளது படக்குழு அதன்படி தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி மற்றும் ஒடிடி இணைய உரிமையை ஜீ5 தளமும் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த அறிவிப்பு ரசிகர்களால் அதிகம் கைப்பற்றியுள்ளது.  மேலும் இப்படம் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Happy to announce @actor_jayamravi 's #Agilan Digital streaming rights acquired by @ZEE5Tamil ! #AgilanFromMarch10
@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl pic.twitter.com/5SAAR6CCZA

— Screen Scene (@Screensceneoffl) March 8, 2023

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்த மாதம் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு வெளியாகவுள்ளது. அதனையடுத்து மனிதன் பட இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் ‘இறைவன் படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து.. நிகழ்ச்சியில் நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து.. நிகழ்ச்சியில் நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ இதோ..

வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..
சினிமா

வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..

போடு விசில.. வெளியான ஒரே நாளில் மாஸ் காட்டும் ‘தி லெஜண்ட்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்.. மிரட்டலான அறிவிப்பு இதோ..
சினிமா

போடு விசில.. வெளியான ஒரே நாளில் மாஸ் காட்டும் ‘தி லெஜண்ட்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்.. மிரட்டலான அறிவிப்பு இதோ..