நிகழ்ச்சியில் பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து.. நடந்தது என்ன? – வைரலாகும் வீடியோ இதோ..

நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து குறித்து பாடகர் பென்னி தயாள் - Singer benny dayal explain what happened in concert | Galatta

முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி மக்கள் மனதை கவர்ந்த பாடகர்களில் மிக முக்கியமானவர் பென்னி தயாள். தமிழில் அதிரடியாக ரஜினி படமான பாபா படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வரும் ‘மாயா மாயா பாடல் மூலம் அறிமுகமானவர் பென்னி தயாள். தொடர் மெஹா ஹிட் பாடல்களை பாடி தனக்கென்ற தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தி, மலையாளம், கன்னடம், உருது, பெங்காலி, குஜராத்தி போன்ற பல மொழிகளில் இதுவரை பென்னி தயாள் பாடி வருகிறார். மேலும் திரைத்துறையில் மட்டுமல்லாமல் தனியார் நிகழ்சிகளிலும் பிரபல இசையமைபபலர்களின் இசை நிகழ்ச்சியிலும் பென்னி தயாள் பாடுவது வழக்கம். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியை படமாக்கி கொண்டு இருந்த ட்ரோன் கேமரா பென்னி தயாள் தலையில் இடித்துள்ளது. இதில் காயப்பட்டு மேடையில் மடங்கி சரிந்தார். பின் கூட்டம் கூடி அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும் பென்னி தயாள் ரசிகர்கள் அவருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் நடந்த நிகழ்வினை தனது வலைதள பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் பென்னி தயாள், நிகழ்வில் ஏற்பட்ட சம்பவம் குரித்தும் தன் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் இரண்டு விரல்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டு அவர் பேசியதாவது,

 “இப்போது காயங்கள் பரவாயில்லை. இந்த காயத்திலிருந்து நான் வேகமாக மீண்டு வருவேன் என்று நினைக்கிறன். நான் மூன்று விஷயங்களை இங்கு உங்களிடம் பகிர விரும்புகிறேன். முதலில் பாடகர்களும் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது மேடையில் பாடகர்களுக்கு அருகில்  ட்ரோன் கேமரா வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் அசைவிற்கும் அந்த கேமரா இயக்கம் நபருக்கு ஒருமித்த புரிதல் இருக்காது. அதனால் ட்ரோன் பயன்படுத்தும் ஒருவரை கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.

தயவு செய்து அனைத்து கல்லூரி, நிறுவனங்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயன்பாட்டாளர்களை தேர்வு செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் அது ஆபத்தாக முடியும். நாங்கள் சாதாரண பாடகர்கள். நாங்கள் மேடியில் பாடுகிறோம்.

நாங்கள் பெரிய நட்சத்திரமான விஜய், அஜித், சல்மான் கான் அல்லது பிரபாஸ் போன்ற ஆக்ஷன் ஹீரோக்கள் அல்ல. அதனால் நேரலை நிகழ்ச்சியின் போது ட்ரோன்கள் பாடகர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் இதனையடுத்து பென்னி தயாள் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

“அந்த துரோகத்தை மறக்கமாட்டேன்” ஜெயம் ரவி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“அந்த துரோகத்தை மறக்கமாட்டேன்” ஜெயம் ரவி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் – அட்டகாசமான நேர்காணல் இதோ..

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா.. சர்ப்ரைசை உடைத்த இயக்குனர் – விவரம் இதோ..
சினிமா

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா.. சர்ப்ரைசை உடைத்த இயக்குனர் – விவரம் இதோ..

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாடல் குறித்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகி வரும் அறிவிப்பு இதோ..
சினிமா

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாடல் குறித்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகி வரும் அறிவிப்பு இதோ..