வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..

நூறு கோடி வசூல் சாதனை படைத்த தனுஷின் வாத்தி -  Dhanush Vaathi box office collection reach 100 crores | Galatta

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாத்தி’. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் நாள் தொடங்கி இன்று வரை ரசிகர்களின் கொண்டாட்டத்தினால் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மொழியிலும் படமாக்கப்பட்டு ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. அதன்படி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று இன்று வரை கணிசமான கூட்டம் திரையரங்குகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் அதே நேரத்தில் மலையாளம் , கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.  அனைத்து மொழியிலும் வாத்தி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தனித்து கவனம் பெற்றது.

legend saravanan movie the legend storming no one in disney plus hotstar

படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை கடந்து கொண்டு இருக்கும் இந்நிலையில் படம் இதுவரை வசூலித்த வசூல் குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாத்தி 16 நாளில் 100 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது. இது குறித்து படக் குழு பதிவிட்ட பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான இந்தியில் ‘ராஞ்சனா’, ‘அசுரன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களின் வரிசையில் 100 கோடி வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் தற்போது வாத்தி திரைப்படமும் இணைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Love for #Vaathi / #SIRMovie is UNSTOPPABLE ❤️

The film has crossed a massive 1️⃣0️⃣0️⃣ crores gross worldwide 🌎

Thank you all for the phenomenal support 😇@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/GOKevvLQo4

— Sithara Entertainments (@SitharaEnts) March 4, 2023

மேலும் தனுஷ் நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘ரகுவரன் BTech’ tதிரைப்படம் முன்னதாக  தெலுங்கான மற்றும் ஆந்திர பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது அந்த படத்தை விட தற்போது சார் படம் மக்கள் மனதை கவர்ந்து வருவதாக தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, பாரதி ராஜா , சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்.பாடல்கள் முன்னதாக மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது குறிபிடத்தக்கது.

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா.. சர்ப்ரைசை உடைத்த இயக்குனர் – விவரம் இதோ..
சினிமா

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த சாயிஷா ஆர்யா.. சர்ப்ரைசை உடைத்த இயக்குனர் – விவரம் இதோ..

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாடல் குறித்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகி வரும் அறிவிப்பு இதோ..
சினிமா

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பாடல் குறித்த அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகி வரும் அறிவிப்பு இதோ..

சினிமா

"அவர் Underrated தான்” சாம் சி எஸ் குறித்து ஜெயம் ரவி கருத்து.. – அட்டகாசமான அகிலன் சிறப்பு நேர்காணல் இதோ..