தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் Jr.NTR.கடைசியாக Aravinda Sametha Veera Raghava என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்த்தில் தயாராகி வரும் RRR படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவரோடு இணைந்து தெலுங்கின் மற்றுமொரு முன்னணி நடிகர் ராம்சரண் மற்றுமொரு ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி 2021-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் சில ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபடுத்துள்ளது.ஜூனியர் NTR சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.இவர் விரைவில் குணடமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இவர் அடுத்ததாக கொரட்டலா சிவா இயக்கும் NTR 30 மற்றும் கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் படம் என இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார்.NTR 30 குறித்த ஏற்கனவே வந்துவிட்டது.இன்று NTR-ன் பிறந்தநாளை முன்னிட்டு NTR-பிரசாந்த் நீல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NTR 31 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் NTR ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அறிவிப்புக்கு பிறகு பெரிதளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.