கொரோனா வைரஸின் தாக்கம் முதல் அலையை விட இரண்டாம் அலையில் இன்னும் தீவிரமாக இருப்பதால்  பல லட்சம் மக்கள் இந்தியா முழுக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் தயாராகியுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி மத்திய அரசு, மாநில அரசு, மருத்துவர்கள் என அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குக்குப்பின் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதிக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு FEFSI தொழிலாளர்கள் சங்க தலைவரான R.K.செல்வமணி அவர்கள் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து FEFSI தொழிலாளர்களும் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

ஊரடங்கு முடிந்தபின் நடைபெற உள்ள திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட வேலைகளில் படப்பிடிப்பு, ப்ரீ ப்ரொடக்ஷன் ,போஸ்ட் ப்ரொடக்ஷன், டப்பிங் என எந்தத் துறை சார்ந்த வேலையாக இருந்தாலும் FEFSI தொழிலாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். 

ஒரு சிலர் தங்கள் உடல் நிலையின் காரணமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதபட்சத்தில் அவர்கள் ஒரு கடிதம் மூலமாக அதை தெரிவித்து பிறகு பணிக்கு செல்லலாம் தெரிவித்துள்ளார்.FEFSI தலைவர் R.K.செல்வமணி இந்த அதிரடி உத்தரவு தற்போது தமிழ் திரைப்படத் தொழிலாளர்களின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.