மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நிவின் பாலி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். கடைசியாக நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான படவெட்டு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

முன்னதாக நிவின்பாலியின் துறைமுகம் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கும் நிலையில் தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின்பாலி நடித்திருக்கும் சாட்டர்டே நைட்  திரைப்படம் நாளை நவம்பர் 4 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் வினய் கோவிந்த் இயக்கத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தாரம்.

பாலி பிக்சர்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரிக்கும் தாரம் திரைப்படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் தாரம் திரைப்படம் இன்று (நவம்பர் 3) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#Thaaram ... Rolling 🎬🎥 pic.twitter.com/eFMw27TMmz

— Nivin Pauly (@NivinOfficial) November 3, 2022