கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். 90's கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது.

இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்களது 22 ஆவது திரைப்படமாக தயாரிக்கும் லவ் டுடே திரைப்படத்திற்கு தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார. யுவன் ஷங்கர் ராஜா லவ் டுடே திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லவ் டுடே திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.  

பக்கா எண்டெர்டைன்மென்ட் திரைப்படமாக தயாராகியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது லவ் டுடே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரதிப் ரங்கநாதனின் அந்த பதிவு இதோ…
 

#LoveToday is not mine anymore. Its yours . I made it for you . I love you all .
And seeing all the special morning shows and hearing the opening is great , cant thank more .

@Ags_production⁩ ⁦@archanakalpathi#KalpathiSAghoram pic.twitter.com/8vLEdeGSuV

— Pradeep Ranganathan (@pradeeponelife) November 3, 2022