சமந்தாவின் யசோதா பட சென்சார் ஓவர்...ரிலீசுக்கு ரெடி !
By Aravind Selvam | Galatta | November 03, 2022 19:47 PM IST

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.
இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அடுத்ததாக சகுந்தலம்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா,விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என பிஸியாக உள்ளார் சமந்தா.இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா.
இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.இவர் நடிக்கும் யசோதா படத்தினை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ளனர்.
இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.வரலக்ஷ்மி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படம் நவம்பர் 11ஆம் தேத்தி 2022-ல் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படத்தின் சென்சார் வேலைகள் தற்போது நிறைவடைந்து யூ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#Yashoda's way to you is clear now 🔥
— Sridevi Movies (@SrideviMovieOff) November 3, 2022
The Biggest Female Centric Pan-Indian film gets censored with U/A 💥https://t.co/J4JjUgv1WU#YashodaTheMovie @Samanthaprabhu2 @varusarath5 @Iamunnimukundan @harishankaroffi @hareeshnarayan @krishnasivalenk #YashodaOnNov11th pic.twitter.com/K3uSA3jNva