இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் அன்பான வரவேற்பால் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாக வசூல் வேட்டை நடத்தியது. தொடர்ந்து அடுத்தடுத்து தனுஷ் திரைப்படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 29ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் இன்று (செப்டம்பர் 20) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து வரும் டிசம்பர் 2-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக முதல் முறை ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் மகளிர் மட்டும், சில்லு கருப்பட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களிலும், சமீபத்தில் வெளிவந்த சுழல் வெப்சீரிஸிலும் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை நிவேதிதா சதீஷ், கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

We are happy to welcome the super talented & beautiful @nivedhithaa_Sat on board for #CaptainMiller 🤗🥁#NivedhithaaSathish @dhanushkraja @ArunMatheswaran @sundeepkishan @priyankaamohan @gvprakash pic.twitter.com/9KbrOJJWqq

— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 20, 2022