தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு (2022) வருகிற டிசம்பர் 14ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து கபந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலிருந்து ரொமான்டிக்கான உன்ன நெனச்சதும் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பாடல் இதோ…