தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட்டானா இயக்குநர்களில் ஒருவராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வரும் சுந்தர்.C அவர்கள் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை-3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C- நடிகர் ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

மேலும் வல்லான், தலைநகரம் 2, ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து சுந்தர்.C நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் மீண்டும் நகைச்சுவை ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கிறது காஃபி வித் காதல் திரைப்படம்.

ஜீவா, ஜெய், DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் காஃபி வித் காதல் படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் காஃபி வித் காதல் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசைய்மைத்துள்ளார். காஃபி வித் காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஃபி வித் காதல் திரைப்படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…