தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. முன்னதாக பிரபல யூட்யூபரும் அறிமுக இயக்குனருமான எருமசாணி விஜய் குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள D-BLOCK திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக அருள்நிதி நடித்திருக்கும் தேஜாவு மற்றும் இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் டைரி ஆகிய 2 திரைப்படங்களின் இறுதிகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் கோப்ரா படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கிய முதல் படமான டிமான்டி காலனி திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர்ஹிட்டான டிமான்டி காலனி திரைப்படத்தின் பார்ட் 2 விரைவில் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அருள்நிதி நடிக்கும் அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.

முன்னதாக ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.கதாநாயகியாக சார்பட்டா பரம்பரை படத்தில் கவனத்தை ஈர்த்தது செய்ய நடிக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இதனை அறிவிக்கும் வகையில் இந்த புதிய படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட அசத்தலான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அருள்நிதி தெரிவித்துள்ளார் அட்டகாசமான அந்த புகைப்படங்கள் இதோ…