நடிகர் சிலம்பரசன்.T.R நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனைத்தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் அழகான திரைப்படங்களை வழங்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

அந்தவகையில் கடைசியாக விஜய்சேதுபதி-நயன்தாரா-சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக முதல்முறை அஜித்குமார் நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்க உள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் #AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில் பாபநாசம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் க்யூட்டான புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேஜை முழுக்க பல வகையான அசைவ உணவுகளை வைத்துக்கொண்டு ரசித்து சாப்பிடும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கும் காதலோடு ஊட்டிவிடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ…