ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் டாம் குரூஸ் தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்கிறார். குறிப்பாக டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவரும் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் படங்கள் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு.

முன்னதாக கடந்த 1996ஆம் ஆண்டு மிஷன் இம்பாஸிபிள் படத்தின் முதல் பாகம் வெளிவந்து உலக அளவில் மெகா ஹிட் ஆனதை அடுத்து தொடர்ந்து வரிசையாக இதுவரை 6 பாகங்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாஸிபிள் ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது.

இந்த வரிசையில் தற்போது மிஷன் இம்பாஸிபிள் படத்தின் 7வது பாகமாக மிஷன் இம்பாசிபிள்- டெட் ரெக்கனிங் பார்ட் 1 அடுத்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்யூரி எழுதி இயக்கியுள்ளார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சாகசங்கள் செய்து அசத்தும் டாம் குரூஸ் மிஷன் இம்பாசிபிள் படங்களில் வரும் மிக பிரம்மாண்டமான ரிஸ்கான அத்தனை ஸ்டண்ட் காட்சிகளையும் அவரே நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில் மீண்டும் அட்டகாசமான ஆக்ஷனாடு வெளிவரும் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. மிரட்டலான அந்த ட்ரைலர் இதோ…