தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இதுவரை யாரும் பெரிதும் அறிந்திடாத காவல்துறை பயிற்சியின் மற்றொரு பக்கம் குறித்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மிக அழுத்தமாக வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளை பெற்றது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படம் இரத்தமும் சதையும்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக இயக்குனர் ஹரிந்தர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகும் இரத்தமும் சதையும் திரைப்படத்தை தயாரிப்பாளர் கார்த்திக் அட்வைத்,P.S.ரெட்டி மற்றும் அனு சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இரத்தமும் சதையும் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. கவனத்தை ஈர்க்கும் அந்த டைட்டிலுக்கு போஸ்டர் இதோ…