பல கோடி சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. உலகநாயகனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் திரைப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் விக்ரம் திரைப்படத்தின் ஸ்பெஷல் எமோஜி தற்போது வெளியானது. ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் உலகநாயகனின் விக்ரம் பட எமோஜி இதோ…