தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் நானி தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ், மலையாள திரை உலக ரசிகர்கள் மத்தியிலும் மிக பிரபலம் அடைந்தவர். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த நான் ஈ, ஜெர்ஸி, கேங் லீடர் உள்ளிட்ட திரைப்படங்கள் பல மொழிகளிலும் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக நானி நடிப்பில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படம் அனைத்து ரசிகர்களின் கவனத்தை பெற்று சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. அடுத்ததாக இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் அன்டே சுந்தரனிக்கி. இப்படத்தில் நானியுடன் இணைந்து கதாநாயகியாக நடிகை நஸ்ரியா நசீம் நடித்துள்ளார்.

அன்டே சுந்தரனிக்கி  திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் தசரா. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நான் அணியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தசரா படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள தசரா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. நானியின் மிரட்டலான தசரா பட டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.