சின்னத்திரையில் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களிலிருந்து  சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி & நிரூப்  நந்தகுமார், அபிநய், தாமரைச்செல்வி, சுருதி  ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ்களாக நுழைந்துள்ளனர்.

மேலும் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க விஜய் டிவி பிரபலமும் நடிகருமான KPY சதீஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வார Eviction ரிசல்ட் வெளியானது.

பிரபல செய்தி வாசிப்பாளரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முக்கிய போட்டியாளருமான அனிதா சம்பத் தற்போது இந்த வார பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று (மார்ச் 20ஆம் தேதி) ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளிவருவது ஒளிபரப்பாகவுள்ளது.