இந்திய திரை உலகின் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விடுதலை. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , சூரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எழுத்தாளர் C.S.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கலைபுலி.எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு மற்றும் மனிதனுக்கும் காளைக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசும் அழுத்தமான திரைப்படமாக தயாராகும் வாடிவாசல் படத்திற்கு R.வேல்ராஜ் மற்றும் ஜாக்கி ஒளிப்பதிவு செய்ய G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

முன்னதாக சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இசையமைப்பாளர் G.V.பிரகாஷ்குமார் வாடிவாசல் திரைப்படத்தின் 2-3 பாடல்கள் முடித்துவிட்டதாகவும் முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து 2 ஆண்டுகளை கடந்த நிலையில் விரைவில்  படப்பிடிப்பு வருகிற ஜூலை-ஆகஸ்டியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் படப்பிடிப்பின் முன்னோட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆரில் வாடிவாசல் திரைப்படத்தின் TEST SHOOT தற்போது நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான பிரத்தியேக தளம் அமைக்கப்பட்டு  இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு மாடுபிடி வீரர்கள் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் இருக்கும் TEST SHOOT புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…