சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சியின் அவ்னி ப்ரோடுக்ஷன் நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தனர்.சுந்தர் சி இந்த தொடருக்கு கதை எழுதியிருந்தார்.ராஜ்கபூர் இந்த தொடரை இயக்கி இருந்தார்.பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பானா நேரத்தில் TRP-யை அள்ளி வந்தது.

ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.நித்யா ராம்,மாளவிகா வேல்ஸ் இருவரும் இந்த தொடரின் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இந்த தொடரின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.விஜயகுமார்,காயத்ரி,விஜயலக்ஷ்மி என்று பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது.இதன் இரண்டாம் பாகத்தை தயார் செய்ய தயாரிப்பாளர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ இருவருக்கும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை அடுத்து இந்த தொடரின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர்.

இந்த தொடரின் நடிகர்கள் தேர்வு மற்றும் டெஸ்ட் ஷூட் உள்ளிட்டவை லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கியது.இரண்டாவது சீசனில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார்.மேகாஸ்ரீ மற்றும் சாந்தனா சேகு இருவரும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.இந்த தொடரையும் அவ்னி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர்.ராஜ்கபூர் இயக்கவுள்ளார்.

இந்த தொடருக்கு ஜோதி என்று குழுவினர் பெயரிட்டுள்ளனர் இந்த சீரியல் சன் NXT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த தொடர் தெலுங்கில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடர் வரும் மே 29ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.