துல்கர் சல்மானின் அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் வரும் கிங் ஆஃப் கொத்தா படம்… மிரட்டலான செம்ம மாஸ் டீசர் இதோ!

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா படத்தின் டீசர் வெளியீடு,dulquer salmaan in king of kotha movie teaser out now | Galatta

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படமாக அடுத்து வெளிவர தயாராகி வரும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் டீசர் வெளியானது.  இந்திய சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2022ம் வருடம் வரிசையாக நான்கு வெவ்வேறு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆப் தி ஆர்டிஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்து  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகின.  திரைப்படங்களைத் தாண்டி முதல்முறையாக வெப் சீரிஸிலும் களமிறங்கிய துல்கர் சல்மான், ஃபேமிலி மேன் & ஃபர்சி வெப் சீரிஸ்களின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிசிலும் முன்னணி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். ஹிந்தியில் தயாராகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளிவர இருக்கிறது. 

இதனிடையே துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தில் அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிங் ஆப் கொத்தா படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கிங் ஆஃப் கொத்தா படத்தில் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கிறது. கிங் ஆஃப் கோதா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக காரைக்குடியில் தொடர்ச்சியாக 95 நாட்களும் பின்னர் கொச்சியிலும் என விறுவிறுப்பாக நடைபெற்ற கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் துல்கர் சல்மானின் அதிரடி கேன்சர் அவதாரத்தில் வந்திருக்கும் கிங் ஆப் கொத்தா திரைப்படத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள அந்த டீசர் இதோ…
 

சினிமா

"விடுமுறையில் 5 நிமிடங்கள் வீண்!"- கணவர் ராகுல் ஷர்மாவுடன் விவாகரத்து என பரவிய வதந்திகளுக்கு மௌனம் கலைத்த அசின்! விவரம் உள்ளே

தளபதி விஜயின் லியோ பட சர்ச்சைகளின் எதிரொலி... நா ரெடி பாடலில் முக்கிய வாசகம் இணைப்பு! விவரம் இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ பட சர்ச்சைகளின் எதிரொலி... நா ரெடி பாடலில் முக்கிய வாசகம் இணைப்பு! விவரம் இதோ

'கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஓப்பனிங் சீன்ல..!'- ஜெயிலர் பட ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

'கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஓப்பனிங் சீன்ல..!'- ஜெயிலர் பட ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!