“இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது!”- ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்… இந்தியன் 2 பட பக்கா மாஸ் அப்டேட் இதோ!

ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசனின் இந்தியன் 2 பட அறிவிப்பு,kamal haasan gifted a panerai watch to shankar for indian 2 movie | Galatta

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களுக்கு விலை உயர்ந்த வாட்ச்சை பரிசாக வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படம் குறித்த அட்டகாசமான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்திய சினிமாவின் கலைஞானியாக போற்றப்படும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றன. அதில் குறிப்பாக நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் KH234 படம் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் பாஸில் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கும் கமல்ஹாசன் அந்த திரைப்படத்திற்கு திரைக்கதை , வசனங்களையும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இயக்குனர்கள் பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரது படங்களிலும் உலகநாயகன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கும் அதே வேளையில் இடையிடையே தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் பிரதான காட்சிகளை பார்த்த உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு விலை உயர்ந்த "PANERAI" வாட்சை பரிசளித்துள்ளார். இது குறித்து வாட்சை பரிசளிக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “ ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர் இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன் ” என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் அந்த பதிவு இதோ…

 

‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B

— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023

தளபதி விஜயின் லியோ பட சர்ச்சைகளின் எதிரொலி... நா ரெடி பாடலில் முக்கிய வாசகம் இணைப்பு! விவரம் இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ பட சர்ச்சைகளின் எதிரொலி... நா ரெடி பாடலில் முக்கிய வாசகம் இணைப்பு! விவரம் இதோ

'கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஓப்பனிங் சீன்ல..!'- ஜெயிலர் பட ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

'கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஓப்பனிங் சீன்ல..!'- ஜெயிலர் பட ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

கிச்சா சுதீப்பின் கிச்சா46 பட டீசர் ரிலீஸ் எப்போது? வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணுவின் அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

கிச்சா சுதீப்பின் கிச்சா46 பட டீசர் ரிலீஸ் எப்போது? வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணுவின் அட்டகாசமான அறிவிப்பு இதோ!