தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அமலாபால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியா திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம், தமிழில் த்ரில்லர் படங்களாக தயாராகியுள்ள அதோ அந்த பறவை போல மற்றும் கடாவர் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. முன்னதாக அமலாபால் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் குடி யடமைத்தே சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

 இதையடுத்து முதல்முறை பாலிவுட்டில் களமிறங்கும் அமலாபால் நடிப்பில் புதிய வெப்சீரிஸ் தயாராகி வெளிவரவுள்ளது.1970s-80 களில் பிரவலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் அமலாபால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக VOOT Select தளத்தில் வெளியாகும் ரஞ்சிஷ் ஹி சஹி டீசர் இதோ…