சிறுத்தை சிவா-சூர்யா பட கெட்டப் இதுதானா..? வைரலாகும் வீடியோ இதோ!
By Anand S | Galatta | August 17, 2022 16:42 PM IST
தனது கடின உழைப்பால் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் ஆகச் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யா முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 68வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் சூர்யா முதல் முறையாக சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யாவின் புதிய கெட்டப் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த கெட்டப் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் கெட்டப் ஆக இருக்கலாம் என்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த புதிய படத்தின் அறிவிப்பு களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அட்டகாசமான புதிய கெட்டப்பில் நடிகர் சூர்யா இருக்கும் அந்த வீடியோ இதோ…
நம்ம #ROLEX சார் மீசைய முறுக்குற style-ஏ தனி !
— Galatta Media (@galattadotcom) August 16, 2022
Enna soldringa #anbaanafans ❔📢#GalattaExclusive 🥁@Suriya_offl #suriyasivakumar #Suriya @Karthi_Offl #Viruman #VirumanBlockbuster pic.twitter.com/F4UmrgFFaf