மோகன்-குஷ்பூ படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | March 30, 2022 16:04 PM IST

தமிழ் திரை உலகில் 80-களில் நட்சத்திர நாயகராக வலம் வந்த நடிகர் மோகன், பாலுமகேந்திராவின் கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் இயக்குனர் பாலுமகேந்திராவின் மூடுபனி, இயக்குனர் மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே, இயக்குனர் R.சௌந்தர்ராஜனின் பயணங்கள் முடிவதில்லை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வெற்றி பயணத்தை தொடங்கினார் மோகன்.
மேலும் விதி, நூறாவது நாள், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, உதயகீதம், இயக்குனர் மணிரத்னத்தின் இதயக்கோவில், மௌன ராகம் மீண்டும் பாலுமகேந்திராவின் ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களில் மோகன் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் மோகன் நடித்த திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக மோகன் நடித்துவரும் திரைப்படம் ஹரா. நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த தாதா87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.G எழுதி இயக்கும் ஹரா திரைப்படத்தில் மோகன் உடன் இணைந்து நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹரா படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஹரா படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் வீழ்வேன் என்று
— Nikil Murukan (@onlynikil) March 30, 2022
நினைத்தாயோ
புத்தாண்டு தினத்தில்@vijaysrig Directorial#SilverJubileeStarT
ஹரா"மோகனின்
TITLE TEASER#14ஏப்ரல் #MOHAN @khushsundar#HARAA #JMcinemas#kovaimohanraj @onlynikil @onlygmedia #NM pic.twitter.com/7VVGoIn31X
Sivakarthikeyan's DON - New surprise glimpse released | Priyanka Mohan | Anirudh
10/01/2022 07:00 PM